thmbirmaiya strated his son movie
பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா 4 மாதங்கள் தனது நடிப்பு வேலைகளைத் தாற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் "உலகம் விலைக்கு வருது" படத்தை இயக்குகிறார்.
.jpg)
இந்தப் படத்தில் மலையாள நடிகை மிருதுளா முரளி நடிக்கிறார். மேலும் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் பூஜை புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலைக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது.
.jpg)
அதே இடத்தில் முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் தமிழர்களில் பாரம்பரியக் கலைகளான தப்பாட்டம், மயிலாட்டம் புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், நடனங்களை நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் ஆடினர். இந்தப் பாடலுக்கு நடன இயக்குனர் தினேஷ் கோரியோகிராபி செய்கிறார்.
.jpg)
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
