தெலுங்குப் படத்தில் பிரசாந்த் கதாநாயகனுக்கு எடுபிடியாக வந்த செய்திகள் கடந்த வாரம் வைரலானதைத் தொடர்ந்து, ஏறத்தாழ கைவிடப்பட்ட ஒரு பிரசாந்த் படத்தைக் கையிலெடுத்தார் அவரது தந்தை தியாகராஜன்.

தெலுங்குப் படத்தில் பிரசாந்த் கதாநாயகனுக்கு எடுபிடியாக வந்த செய்திகள் கடந்த வாரம் வைரலானதைத் தொடர்ந்து, ஏறத்தாழ கைவிடப்பட்ட ஒரு பிரசாந்த் படத்தைக் கையிலெடுத்தார் அவரது தந்தை தியாகராஜன்.

ராம் சரணின் தெலுங்குப் படமான ’வினய விதேய ராமா’வில் செகண்ட் ஹீரோ போல ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்பிரசாந்த். ஆனால் இதுவரை வெளியான படம் குறித்த செய்திகளில் பிரசாந்துக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இதைக்கண்டு பிரசாந்தின் ரசிகர்கள் பெரும் சஞ்சலத்துக்கு ஆளாகியிருந்த நிலையில், கடந்த வாரம் வெளியிடப்பட்ட ‘வினய விதேய ராமா’ டீஸரிலும் சும்மா ரெண்டே ரெண்டு ஷாட்களில் பிரசாந்த் ராம்சரனுக்கு பின்னால் நடந்து வந்து காணாமல் போனார். 

இதை தமிழ் ஊடகங்கள் அநியாயத்துக்கு ஊதிப் பெரிதாக்கின. ஏற்கனவே தன்மேல் ஒரு புகைப்படக்கலைஞி ‘மி டூ’ புகார் கொடுத்திருந்த நிலையில் இப்படி அவமானத்துக்கு மேல் அவமானமா என்று நொந்துபோன தியாகராஜன், இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ‘ஜானி’ என்ற படத்தை கையில் எடுத்து, அப்படத்தின் ட்ரெயிலரை மீண்டும் அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறார்.

அந்த ட்ரெயிலரை இதுவரை சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்திருப்பதாகவும், இன்னும் ஒரு இருபது லட்சம் பேர் பார்க்க விரும்பிக் காத்திருப்பதாகவும் தியாகராஜனும், பிரசாந்தும் பேசிக்கொள்கிறார்கள்.