இந்தப் படத்தை தொடர்ந்து, சீன மொழியில் வெளியான 'குங்ஃபூ யோகா' மற்றும் 'வெல்கம் டு நியூ யார்க்', 'பாகி 2' ஆகிய இந்தி படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்த அவர், பாலிவுட்டில் இன்று அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உச்சம் தொட்டுள்ளார்.

தற்போது, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் 'ராதே' படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ள திஷா பதானி, அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இளசுகளை சூடேற்றுவதை பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், டூபீஸ் உடையில் செம்ம செக்ஸியாக போஸ்கொடுத்திருக்கும் பிகினி புகைப்படத்தை, திஷா பதானி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ப்ளாக் அண்ட் வொயிட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்தபடி கவர்ச்சி ரசம் வழிந்தோட திஷா பதானி கொடுத்திருக்கும் செக்ஸி போஸ், பல ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. 

கவர்ச்சியில் திஷா காட்டிய தாராளத்தைக் கண்டு சொக்கிப்போன இளசுகள், புகைப்படத்துக்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். முன்னதாக, புத்தர் கோயிலில் சிலைகளுக்கு முன்பு கவர்ச்சி உடையில் நின்று போஸ் கொடுத்த புகைப்படங்களையும் திஷா பதானி பகிர்ந்திருந்தார்.

 இவ்விரு புகைப்படங்களும் லைக்குகளை குவித்த அதேநேரம், நெட்டிசன்களின் எதிர்ப்புக்கும் ஆளானார் திஷா பதானி. காரணம், கோயில் சிலைகளுக்கு முன்பு அவர் காலணியுடன் நின்றிருந்ததுதான். 

இதைப் பார்த்த பலரும், "இது, ஷுட்டிங் ஸ்பாட் அல்ல கவர்ச்சியாக போஸ் கொடுப்பதற்கு, நீங்கள் நிற்கும் இடம் ஒரு கோயில்" என கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.