பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்தின் முதல் நாளான நேற்று, எப்போதும் போல், கண்பஷன் ரூமில், நாமினேஷன் படலம் அரங்கேறியது. 

ஒவ்வொருவராக சென்று, நாமினேட் செய்வதற்கான காரணங்களை கூறி, இருவரின் பெயரை பிக்பாஸ்ஸிடம் கூறினர். அந்த வகையில் அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் உள்ளே இருப்பதும், வெளியேறுவதும் முடிவு செய்யப்படும்.

முதல் ஆளாக கண்பஷன் ரூமிற்கு வந்த சாக்ஷி மதுமிதாவை முதல் நபராக நாமினேட் செய்தார்.  ஒருவருடைய கேரக்டரை பற்றி அவர் தவறாக பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என முதல் வாரத்தின் காரணத்தையே திரும்பவும் கூறினார்.  இரண்டாவதாக நடிகர் சரவணன் பெயரை நாமினேட் செய்தார்.  அவர் அவருக்கு ஒதுக்கிய வேலைகளை சரியாக செய்வதில்லை என காரணம் கூறினார்.

இவரைத் தொடர்ந்து வந்த ஷெரின், மதுமிதா பெயரை நாமினி செய்தார்.  அடுத்ததாக மீராவின் பெயரை நாமினேட் செய்தார். இவரைத் தொடர்ந்து ரேஷ்மா முதல் ஆளாக நடிகர் சரவணன் பெயரை நாமினேட் செய்தார். அவர் தன்னை குண்டு என கூறியதால் தான் மிகவும் மனவேதனை பட்டதாகவும், இதற்கு அவர் மன்னிப்பு கேட்டும் தன்னுடைய மனது கஷ்டப்படுவதாக கூறி அவரை நாமினேட் செய்தார்.  இதைத்தொடர்ந்து, இரண்டாவது ஆளாக மதுமிதாவை நாமினேட் செய்தார்.  கடந்த வாரம் தான் எது செய்தாலும் அது குறித்து அவர் புகார் கொடுத்து கொண்டே இருந்ததாக காரணம் கூறினார்.

இவரை தொடர்ந்து கண்பஷன் ரூமிற்கு வந்த வனிதா மதுமிதாவை முதல் ஆளாக நாமினேட் செய்தார்.  அவர் அதிக ஆட்டிடியூட் காட்டுவதாக தெரிவித்தார்.  இரண்டாவது நபராக சரவணன் பெயரை நாமினேட் செய்தார்.  டீமில் அவர் கண்சென்ரேட் பண்ணுவதில்லை என்று புகார் கூறினார்.

பின் முகேன் வனிதாவை நாமினேட் செய்தார். பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அவர் இருக்கிறார் ஆனால் அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக பிரச்சனை வேறு விதமாக திசை திருப்பி விடுவதாக கூறினார்.  இரண்டாவது ஆளாக மீராவை நாமினேட் செய்தார். அவர் ஏதேனும் பிரச்சனை செய்யும் நோக்கத்துடனேயே இருப்பதாக முகேன் கூறினார்.

இவரை தொடர்ந்து வந்த கவின், வனிதா மற்றும் மீராவை நாமினேட் செய்தார். இதை தொடர்ந்து வந்த லாஸ்லியா மோகன் வைத்தியா மற்றும் வனிதாவை நாமினேட் செய்தார். மோகன் வைத்தியா வீட்டில் பிரச்சனை நடந்துகொண்டிருந்தபோது மது சொன்ன வார்த்தைகளை அவர் காது கொடுத்து கேட்கவில்லை என்பது தனக்கு தவறுதலாக பட்டதாக காரணம் கூறினார்.  அடுத்ததாக வனிதா சிறு சிறு பிரச்சினைகளை கூட அவர் பெரிதாக்குவதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து சாண்டி வனிதாவின் பெயரை நாமினேட் செய்தார். சிறிய விஷயத்தைக்கூட, மற்றவர்கள் மனதை நோகடிக்கும் படி கூறுவதாக தெரிவித்தார். இரண்டாவது ஆளாக மீராவை நாமினேட் செய்தார்.  அவர் கேம் ஆடுவது போல் தோன்றுவதாக கூறினார்.

அடுத்ததாக வந்த சரவணன் மோகன் வைத்தியதியாவை நாமினேட் செய்தார்.  கடந்த முறை ஓட்டு வாங்குவதற்காக நன்றாக பேசிய அவர் தற்போது முகத்தைத் தூக்கிக் கொண்டு பேசுவதாக கூறினார் . இரண்டாவது நபராக வனிதாவின் பெயரை நாமினேட் செய்தார்.

அடுத்ததாக வந்த சேரன் மீராவை நாமினேட் செய்தார்.  இரண்டாவது ஆளாக வனிதாவின் பெயரை நாமினி செய்தார்.  பின் வந்த மீரா முதல் ஆளாக மதுவை நாமினேட் செய்தார். இரண்டாவது ஆளாக லாஸ்லியா  பெயரை நாமினேட் செய்தார்.  மோகன் வைத்யா மதுமிதா பெயரையும்,  சரவணன் பெயரையும் நாமினேட் செய்தார்.  இவரைத் தொடர்ந்து வந்த தர்ஷன் வனிதாவின் பெயரை நாமினி செய்தார்.  இரண்டாவதாக மீராவின் பெயரை நாமினேட் செய்தார்.  மதுமிதா சாக்ஷியை நாமினி செய்தார் இரண்டாவதாக ஷெரின் பெயரை நாமினி செய்தார். பின் வந்த அபிராமி, மதுவின் பெயரையும், மீராவின் பெயரையும் நாமினேட் செய்தார்.