பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், முதல் வாரத்தின் முடிவில் தோன்றிய கமல் வார்த்தையில் கூட கடுமை காட்டாமல்... போட்டியாளர்கள் செய்த சிறு சிறு தவறுகளையும் தட்டி கொடுத்து சுட்டி காட்டினார். 

இந்நிலையில் இன்றுடன், இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், அடுத்த வாரம் எலிமினேஷன் உள்ளது உறுதி. இதற்கான முதல் நாமினேஷன் படலம் இன்று தொடங்குகிறது. அதனை  இன்றைய புரொமோவில் வெளிப்படுத்தியுள்ளனர்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேஷன் செய்து வருகின்றனர். அதில் சனம் ஷெட்டியை 4 பேரும், ஷிவானியை 4 பேரும் நாமினேஷன் செய்துள்ளதால் இந்த இரண்டு அழகிய தேவதைகளின் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் நாமினேசன் பட்டியலில் இருக்கும் நால்வர் யார் யார் என்பது தெரியும் என்றாலும் சனம்ஷெட்டி மற்றும் ஷிவானி இடம்பெறுவது உறுதி என்பதும் இருவரில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சனம் ஷெட்டியின் பெயர் இதில் இடம்பெறுவதற்கான முக்கிய காரணமாக போட்டியாளர்கள் கூறுவது, அவர் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருவதாக போட்டியாளர்கள் கருதுவதே, அதே போல் மக்களும் அவர் நடித்து வருவதாகவே கூறி வருகிறார்கள். ஷிவானி ஒரு வாரம் ஆகியும் இன்னும் பலருடன் பேசாமல் தள்ளி தள்ளி சென்று கொண்டிருப்பது அவர் பெயரை இந்த லிஸ்டில் இடம்பெற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.