பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி நாட்களை நெருங்க, நெருங்க திடீர் திடீர் என பல மாற்றங்கள் நடக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்றைய தினம் நேரில் சென்று பார்த்த ரசிகர்கள் சிலர், இந்த வாரம் வெளியேறியது நடிகர் சென்ராயன் என கூறியிருந்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக ஒரு புகைப்படமும் வெளியானது.

இதனால் பல ரசிகர்கள் செண்ரயானுக்கு ஆதரவாக, குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா, வெளியாவது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சியாகியுள்ளனர்.  

ஆனால் இந்த புகைப்படம், ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரடியாக எடுக்கப்பட்டதா? அல்லது போட்டோ ஷாப் செய்யப்பட்டதா? என தெரியவில்லை. 

எனினும் இந்த புகைப்படம் சென்ராயன் ரசிகர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருந்தாலும், இன்றைய நிகழ்ச்சியில், சென்ராயன் எலிமினேஷன் ஆவார் என பலர் கூறியுள்ளது, பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதில், ஏதாவது மாற்றங்கள் நடக்குமா? என பொறுத்திருந்து. பார்ப்போம்!