கடந்த பிக்பாஸ் சீசனை விட, இந்த முறை நிகழ்ச்சி பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல், ஒளிபரப்பாகி வருவதை பார்த்து வருகிறோம். வாண்டடாக கூட சிலர், சண்டைக்கு பிள்ளையார் சுழி போடுவதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், சற்று முன் வெளியாகியுள்ள புரோமோ அதனை உறுதிசெய்துள்ளது.

இதில் தொகுப்பாளர் கமலஹாசன் பேசும் போது, 'பலமுறை சொல்லி பார்த்துவிட்டேன், ஜோடியாக விளையாடுனீங்க என்றால் ஜோடியாக வெளியே போக வேண்டும் என்று, கூட்டத்தோடு விளையாடுனீங்க என்றால் கூண்டோடு கைலாசம்னு, கேட்டபாடு இல்லை. இப்போ நீங்கள் உங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சிடீங்க.

நான் கேள்வி பட்டவரையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன். அதில் ஒன்றை இன்றே செய்வோம் என கூறுகிறார். அப்போது இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் உள்ள அனைவரது முகமும் திரைமுன் வந்து செல்கிறது.

இந்த புரோமோ இதோ...

.