பிக்பாஸ் வீட்டில் தீபாவளி ஸ்பெஷலாக அரங்கேறிய டாஸ்க் 'பாட்டிசொல்லை தட்டாதே'. கடந்த மூன்று தினங்களாக நடந்து வந்தது. இந்த டாஸ்கிங் ரிசல்ட்டை பிக்பாஸ் இன்று அறிவிக்கிறார். 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது பேசும் பிக்பாஸ், 'பாட்டி சொல்லை தட்டாதே' டாஸ்கில் பாட்டியை மகிழ்ச்சியாக வைத்திருக்க தவறிவிட்டதாக தெரிவிக்கிறார்.

இடையில் பாலாஜி அந்த பத்திரத்தை, பீரோவில் இருந்து தான் எடுக்கவில்லை என தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசும் பிக்பாஸ் இந்த முறை லாஸுரி டாஸ்கை சரியாக விளையாடாததால், ஜீரோ மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

பின்னர் பாலாஜியை பார்த்து, பாலாஜி டாஸ்கை முறையாக விளையாட வில்லை என தெரிவித்ததோடு, டாஸ்க் என்ன என்பதை தெரிந்து கொண்டு விளையாடுங்கள் என கூறுகிறார். மொத்தத்தில் பாலாஜி செய்த வினையை, ஒட்டு மொத்த போட்டியாளர்களும் திசை மாறியதால், தற்போது லாஸுரி பட்ஜெட் இல்லாமல் போய் விட்டது.