பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்கள் ஒளிபரப்பாகி உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரபல செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, குறைவான வாக்குகள் பெற்றதால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நாமினேட் செய்யப்பட்ட பிரபலங்கள் சிலர் வெளியேற கூடாது என பயத்தில் இருந்த நிலையில், வெளியேறும் மன பக்குவம் தனக்கு உள்ளதாக தைரியமாக சொன்னவர் பார்த்திமா பாபு தான். முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்த இவர், முதல் போட்டியாளராக வெளியே சென்றுள்ளார். குறிப்பாக மக்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் சென்றுள்ளது இவரின் சிறப்பு என்றே சொல்லலாம்.

இது ஒரு புறம் இருக்க, இவரிடம் கமல் உங்களுக்கு ஒரு பவர் இருக்கிறது என கூறி, இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் பங்கேற்க உள்ள மூன்று பேரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என கூறினார்.

பாத்திமா பாபு, தர்ஷன், அபிராமி, சாண்டி என மூன்று போட்டியாளர்கள் பெயரை கூறினார். மேலும் இதற்கான காரணத்தையும் அவர் கூறினார்.அபிராமியை பற்றி கூறிய அவர், இதுவே உங்களை அழுது கொண்டே இருக்கும் ஒருவராக மட்டுமே பலர் பார்த்துள்ளனர். உங்களுக்கு பல முகங்கள் இருக்கிறது அதனை வெளிக்கொண்டு வரவே உங்களை தேர்வு செய்ததாக கூறுகிறார்.

இதை தொடர்ந்து தர்ஷன் பற்றி பேசிய பார்த்திமா பாபு, உன்னுடைய குரலை யாரும் அதிகம் கேட்க வில்லை என்பது ஒரு குறையாக இருப்பதால், தலைமை பொறுப்புக்கு அவரை தேர்வு செய்ததாக கூறுகிறார்.

சாண்டி பற்றி பேசுகையில், சண்டை சச்சரவுடன் போகும் பிக்பாஸ் குடும்பத்தை, நகைச்சுவையாக கொண்டு செல்ல அவரால் முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது எனவே அவரை தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.