பிக்பாஸ்:

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே தமிழில் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி துவங்கப்பட்ட அன்று, 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அவர்களை தொடர்ந்து நிகழ்ச்சி துவங்கப்பட்ட மறுநாள், நடிகையும் , மாடலுமான மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

ரணகளமான பிக்பாஸ் வீடு:

16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, பிக்பாஸ் வீடு ரணகளமாக இருந்தது. குறிப்பாக வனிதா ஒரு பக்கம் சண்டை வாங்க, மற்றொரு புறம் அமைதியாக இருந்து ஒவ்வொரு பிரச்சனையாக செய்தார் அபி. மேலும் மீரா மிதுனம் அவருடைய பங்கிற்கு சண்டையால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்த்தார்.

காதல் பிரச்சனைகள்:

தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் ஒரு பக்கம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் இருந்தாலும், மற்றொரு புறம் காதல் விஷயங்களும் பிக்பாஸ் வீட்டில் களைகட்டியது. கவினை காதலிப்பதாக அபிராமி முதலில் துவங்க, தற்போது அந்த லவ் பிரேக் அப் ஆகி முகேன் பக்கம் சென்றார். அவருடன் தன்னுடைய காதலை ஏற்று கொள்ளாததால் நட்பு என்கிற பெயரில் காதலர்கள் போல் பேசி வருகிறார்கள்.

கவின் காதல்:

அதே நேரத்தில், கவினிடம் தன்னுடைய மனதை பறிகொடுத்தார் சாக்ஷி,  பின் கவின் பார்வை லாஸ்லியா மீது திரும்பியதும், அதனை சாக்ஷியால் ஏற்று கொள்ள முடியாதல் பெரிய பிரச்சனையாக வெடித்தது.

வெளியேற்ற பட்ட போட்டியாளர்கள்:

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, ஆகிய பிரபலங்கள் வெளியேற்றப்பட்டுளா நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள நபர் யார் என்பது முடிவு செய்வதில், ரசிகர்களுக்கே குழப்பமான மனநிலை உள்ளது.

இந்த வாரம் வெளியேற போவது இவரா?

இதுகுறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம், சாக்ஷியே வெளியேற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நாளைய தினம் யார்? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.