பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில், ஜனனி, பாலாஜி, யாஷிகா,ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி, ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமான நாள் முதல், இரண்டாவது வாரத்தில் இருந்து வாரம் தோறும் ஒரு நபர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியேற உள்ளனர் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனைவரும் எதிர்பார்த்தது போல் பாலாஜியும், யாரும் எதிர்பார்க்காத நபரான யாஷிகாவும் வெளியேறுகிறார்கள். 

இதனால் இந்த வாரமும் எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்றியுள்ளது பிக்பாஸ் குழு. மேலும் ஃபைனலுக்கு 'விஜி', 'ரித்விகா', 'ஜனனி', 'ஐஸ்வர்யா' ஆகிய நான்கு பேர்  செல்வது உறுதியாகியுள்ளது.  பிக்பாஸ் போட்டியில் கடும் போட்டி நிலவினாலும் ஐஸ்வர்யா டைட்டில் வின்னராக வருவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

எனினும் இனி தான் ஐஸ்வர்யாவுக்கு பிரச்சனை அதிகமாக வாய்ப்பு உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளே சென்ற நாள் முதல் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்து வந்த யாஷிகா தற்போது வெளியேறுவதால் தனிமை படுத்தப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா. இதனால் ஒரு வாரத்தில் இவருடைய நிலை என்னவாகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.