பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும், போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சிறந்து விளங்குபவர்கள் மூன்று பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு போட்டி ஒன்று வைக்கப்பட்டு  அதில் ஜெயிப்பவர், பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

அந்த வகையில் இந்த வாரம் கிராமத்து டாஸ்கில் சிறப்பாக விளையாடிய மீரா, தர்ஷன், மற்றும் முகேன் ஆகிய மூவர் இந்த வாரம், தலைவர் போட்டிக்கு போட்டியிட்டனர். 

இவர்களுக்கு நேற்றைய தினம் பிக்பாஸ் ஒரு போட்டிவைத்தார். அது என்னவென்றால், ஒரு குச்சியில் சில பலூன்கள் கட்டப்பட்டிருக்கும், அவற்றை போட்டியாளர்கள் உடைப்பார்கள், அவர்களிடம் இருந்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும், மூவரும் அவரவர் குச்சியில் கட்டப்பட்ட பலூன்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான்.

இந்த போட்டியில் ஒரே ஒரு பலூனை உடைய விடாமல், காப்பாற்றி, இந்த வாரம் பிக்பாஸ் தலைவர் என்கிற பொறுப்பை ஏற்றுள்ளார் தர்ஷன். இது வரை மூன்று முறை தலைவர் போட்டிக்கு போட்டியிட்டு, தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 

இவர், தலைவர் என்கிற பொறுப்பை ஏற்ற உடனே குக்கிங் டீம், பாத்திரம் கழுவும் டீம், கிளீனிங் டீம், மற்றும் பாத் ரூம் கிளீனிங் டீம் ஆகியவற்றை பிரிந்ததோடு, இந்த வீட்டில் நடைபெறும் பிரச்சனைகளை சொல்வதற்காக ஒரு மீட்டிங் அரேஞ் செய்யப்படும் அதில் உங்களுக்கு மனதில் உள்ள சங்கடங்களை கூறலாம் என புதிய முறை ஒன்றை கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு பிரச்சனைகளை குறைக்க வழி வகுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.