this story was first accepted by this famous star only says famous director
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் திரைப்படம் தளபதி 62. அட்டகாசமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, இப்போது பாதிக்கும் மேல் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. அரசியல் பற்றி வெளிப்படையாக பேசப்போகு படம் என்பதாலும், தளபதி விஜயின் படம் என்பதாலும், இந்த ”தளபதி 62” படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தளபதி 62 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், கீர்த்தி சுரேஷ் மீது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் சோஃபாவில் அமர்ந்திருக்க , விஜய் தரையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம், இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது இந்த தளபதி 62 திரைப்படம், விஜய்க்காக எழுதப்பட்ட கதை இல்லை. என ஏ.ஆர். முருகதாஸ் கூறி இருக்கிறார். இந்த படத்தை அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தான் முதலில் கூறினாராம். அவரும் இந்த கதையை கேட்ட பிறகு அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

பிறகு சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஏற்ப கதையில் சில மாறுதல்கள் செய்து, தளபதி 62 திரைப்படத்தை விஜய்க்கு ஏற்ற படமாக இப்போது எடுத்து வருகிறாராம் முருகதாஸ்.
