This is the third heroine of Aravindhami who plays Narayanasuram
துருவங்கள் 16 இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்து இயக்கவுள்ள அரவிந்த்சாமி நடிக்கும் ’நரகாசுரன்’ படத்தின் மூன்றாவது கதாநாயகனாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நரகாசூரன் படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகர்கள். இவர்களில் அரவிந்த்சாமி மற்றும் இந்திரஜித் ஆகியோர் ஏற்கனவே கதாநாயகர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது கதநாயகராக “மாநகரம்” படத்தில் நடித்திருந்த சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் நரேன் கூறியது:
சந்தீப் தற்போது எங்கள் அணியில் இணைந்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம். ஆனால் இந்த படம் 2018-ஆம் ஆண்டுதான் திரைக்கு வரும். நரகாசுரன் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியிடப்படும். மாயா படத்திற்கு இசையமைத்த ரோன் ஈதன் யோகன், நரகாசுரன் படத்திற்கு இசையமைக்கிறார்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நரகாசுரன் படத்தை கார்த்திக் நரேன், இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
