This is the story kaala Theater released on the social website
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'காலா'. ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'கபாலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 'காலா' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
எனினும் ரஜினி தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருவதால், சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது... 'சமூக விரோதிகள்' தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஊடுருவி விட்டனர் என்றும் மக்கள் அனைவரும் எதுக்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என கிளம்பினால் தமிழ் நாடு சுடுகாடாக மாறும் என தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ஏற்கனவே நார்வே, சுசர்லாந்த் உள்ளிட்ட வெளிநாடுகளில் 'காலா' திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்னும் திரைப்படம் வெளியாக மூன்று நாட்களே உள்ள நிலையில், காலா படத்தின் கதை இது தான் என அமெரிக்க தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் 'ரஜினிகாந்த் படம் 'காலா', குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்ற சிறுவன், தாராவி பகுதியில் டான் ஆகிறார். மக்களுக்காக போராடுகிறார். என்று கூறி இப்படத்தை பார்க்க வாருங்கள்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்திய படத்தின் கதை சுருக்கம் திரையரங்கின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
