This is the reason why nayanthra hesitate to act in sagamithra film

பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் சரித்திர படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிக்கொண்ட பிறகு அந்த வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. 

அனுஷ்கா தான் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால் அவரோ நடிப்பில் இருந்து விலகி திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் எனவே முடியாது என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். 

 அடுத்து நயன் தாரா... நயனின் மார்க்கெட் டல்லாகிக்கொண்டே போகிறது. ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை. எனவே இந்தப் படத்தில் நடிக்க நடிகைக்கு விருப்பம் தானாம்.

ஆனாலும் கூட நம்மை ஃபர்ஸ்ட் சாய்ஸாக கேட்காமல் இரண்டு நடிகைகள் முடியாது என்று சொன்னதும் கேட்கிறார்களே என்ற கோபம் இருக்கிறதாம். அதனால் தான் முடிவை சொல்ல தாமதிக்கிறார் என்கிறார்கள். 

சரித்திர படத்தை இயக்கவிருப்பவரின் பேலேஸ் படத்தின் முதல் பாகத்திலேயே பப்ளி நடிகைக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியவர் நயன நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.