This is my role in irumbuthirai released by Samantha
இரும்புத்திரை படத்தில் நடிக்கும் சமந்தா அந்தப் படத்தில் தனது கெட்டப்புக்கான லேட்டஸ்ட் போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். சேலையில் அழகு சிலை போன்று நிற்கும் சமந்தாவின் இந்த போட்டோவுக்கு லைக்ஸ் பட்டன் தெறிக்குது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் படம் இரும்பு திரை.
இந்தப் படத்தில் விஷால், சமந்தா ஆகியோருடன் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஷால், அர்ஜீன் என்று இந்தப் படத்தின் வீடியோக்களை வெளியிட்டு அப்படக்குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹீரோயின் சமந்தா, அப்படத்தில் தனது கெட்டப் இதுதான் என்று வெளியிட்டுள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ள சமந்தா, அதில் பாரம்பரிய சேலையில் அழகுச் சிலை போன்று ஜொலிக்கிறார்.
இதை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகைகளும் வரவேற்று லைக்ஸ் பட்டனை தெறிக்க விடுகின்றனர்.
