this actress of vijays upcoming movie won femina super daughter award
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ”சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். அதிரடி அரசியலுடன், கார்பரேட் நிறுவனங்களை சிதறடிக்கும் கதைக்களம் கொண்ட, இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றே கூட சொல்லலாம். அவ்வளவு வேகமாக தயாராகி வருகிறது சர்கார்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இன்னொரு பிரபல நடிகையும் நடித்திருக்கிறார். நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தான் அந்த இன்னொரு நடிகை. இவர் ”சர்கார்” படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவருக்கு சமீபத்தி ஒரு விருது கிடைத்திருக்கிறது. ”ஃபெமினா சூப்பர் மகள்” என்னும் விருதினை வரலஷ்மிக்கு வழங்கி பெருமை படுத்தி இருக்கிறது ஃபெமினா அமைப்பு.. இந்த விருதினை பெற்றதற்காக வரலஷ்மிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் தனது மகள் பெற்றிருக்கும் இந்த விருதினை நினைத்து, தான் மிகவும் பெருமை படுவதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
