thirusha acting for hourangasip palace
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நாயகி, கொடி ஆகிய படங்கள் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும் தற்போது திரிஷா, நயன்தாரா பாணியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் '96 ', 'சதுரங்க வேட்டை', 'மோகினி' உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல் இவர் நடித்து வரும் 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் படபிடிப்பும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
மேலும் இப்படத்தின் படப் பிடிப்பு 200 வருட பழைமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்தக் கோட்டை முன்னர் ஔரங்கஜீப் வசம் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
முதல்கட்டப் படப்பிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை 24HRS நிறுவனம் தயாரிக்கிறது, இதில் நந்தா மற்றும் ரிசார்ட் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
