கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் தலை எடுத்த போதே, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், ஷாப்பிங் மால், திரையரங்கம் போன்ற இடங்கள் இழுத்து மூடப்பட்டது. 

முதல் கட்ட ஊரடங்கிற்கு பின் திரையரங்கம் இயங்கும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே சென்றதால், மே மாதம் 3 ஆம் தேதியே முடிவடைய வேண்டிய, இரண்டாம் கட்ட ஊரடங்கு, இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், முன்பை விட தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஒரே நாளில் 700 க்கும் மேற்பட்ட பலர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது டாஸ்க் மார்க்குகளை தமிழகத்தில் திறந்ததற்கு பல அரசியல் காட்சிகள் மற்றும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல்  வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட விஷயங்கள் மீண்டும் செயல்படுவது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒரு சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திரையரங்கம் திரைப்பட்டாலும், கொரோனா பீதியில் இருந்து வெளியேறி மக்கள் திரையரகங்களுக்கு வருவார்களா என்பதும் சந்தேகமே.

இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''நமது தமிழக முதல்வர் வருகிற மே 25 அல்லது ஜூன் 1 திரையரங்கம் திறப்பதற்கான காலமாக இருக்கலாம் என்று அதில் கூறியுள்ளார். 

மேலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில்  5 முக்கிய கோரிக்கைகளாக முன் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது,

1 . ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். 

2. ஆண்டுக்கொரு முறை லைசென்ஸ் புதுப்பித்தல் என்ற முறையை மாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை லைசென்ஸ் புதுப்பித்தல் முறையை அளிக்கவேண்டும்.

3. செயல்பட்டுக்கொண்டிருக்கிற திரையரங்குகளை மாற்றி, சின்ன திரையரங்குகளாக மாற்ற, கலெக்டரிடமும் PWD-இடமும் அனுமதி பெற்றால் போதும் என்ற ஆர்டர் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் படங்கள் திரையிடுவதற்கு எங்களுக்கு சௌகரியமாக இருக்கும். 

4 . லோக்கல் பாடி டாக்ஸ் தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்.

5. புதிய திரையரங்குகள் வரும் போது, 10 சதவீதம் இடம்  எண்டர்டெயின்மென்ட் இன்டஸ்ட்ரியான திரையரங்கம் வழங்க தேவையில்லை என தமிழக முதல்வர் சொல்லியிருந்தார்கள். அதற்கான ஆர்டரை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முதலவர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சர் ஆகியோருக்கு அளிக்கவிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.