thirumurugan gandhi slams vijay

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் ஒரு வாரத்தைக் கடந்தும் இன்னும் அனைத்து திரையரங்கத்திலும் மாஸ் காட்டி வருகிறது.

எதிர்பார்த்ததை விட படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட GST வசனத்தை இன்னும் படத்தில் இருந்து நீக்காததால் அடுத்து என்ன பிரச்சனை வருமோ என்று ஒரு பக்கம் படக்குழுவினருக்கு அச்சமும் இருந்து தான் வருகிறது.

இந்நிலையில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி மெர்சல் படத்தின் சர்ச்சை குறித்து பேசும் போது ‘விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.

ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை என கடுப்பாகத் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார். இந்தக் கருத்து மூலம் விஜய் ஒரு தைரியம் இல்லாதவர் என சுட்டிக் காட்டியுள்ளார் என பலர் கூறி வருகின்றனர்.