உதயநிதி , தமன்னா நடித்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவர தயாராக உள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று  அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. 

படத்தை பார்த்த பலரும் மிகச்சிறப்பான திரைப்படம் என்ற கருத்தைச் சொன்னார்கள். அதில் விசிக தலைவர் திருமாவளவன் 'கண்ணே கலைமானே' மிகச்சிறந்த எதார்த்தமான படம் என்றும், உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி என நடித்திருக்கும் அனைத்து நடிகர்களையும் எதார்த்தம் மீறாமல் இயக்குனர் சீனுராமசாமி நடிக்க வைத்திருக்கிறார் என பாராட்டினார். 

மேலும் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும்  வைரமுத்துவின் வரிகள் அர்த்தமுள்ளதாகவும், ஆழமானதாகவும் உள்ளது. யுவன் இசை திரைப்படத்தை கிராம சூழலுக்கு இட்டுச் செல்கின்றது. மொத்தத்தில் கவித்துவமான குடும்பத் படம் என பாராட்டி, தமிழ் திரைப்பட குழுவிற்கு தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.