- Home
- Cinema
- ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த ரசிகர்கள்!!
ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த ரசிகர்கள்!!
Ilaiyaraaja Rehearsal at Hosur Cold Weather Condition : இசை நிகழ்ச்சிக்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒத்திகை பார்த்த இளையராஜாவின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஓசூரில் லைவ் கான்செர்ட் இளையராஜா நடுங்கும் குளிரில் ஒத்திகை
ஓசூரில் லைவ் கான்செட்டுக்காக இளையராஜா நடுங்கும் குளிரில் சால்வை போர்த்திக் கொண்டு ஒத்தியை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெறும் வரவேற்பு பெற்று வருகிறது. இளையராஜா முதல் முறையாக ஓசூரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இன்று 14 ஆம் தேதி நடக்கிறது. ஓசூரில் உள்ள பாகலூர் சார்ஜா புராச்சாலையில் உள்ள பி கே ஆர் ஃபார்ம்ஸில் தான் இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது . இதற்காக இளையராஜா மட்டுமின்றி அவரது இசைக்குழுவினர்களும் ஓசூரில் முகாமிட்டுள்ளனர்.
இளையராஜாவின் வீடியோ
இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஒத்திகை பார்க்கும் இளையராஜாவின் வீடியோ தான் பலரையும் பாராட்ட வைத்துள்ளது. அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். தமிழக இசையை உலக அளவில் பிரபலப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். பாடல் என்றாலே அது இளையராஜா தான் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இளையராஜா 8,600 க்கும் மேற்பட்ட பாடல்களை இயக்கி எழுதி இசையமைத்துள்ளார்.
Ilaiyaraaja Hosur Concert
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடல் ஒரு சிறப்பு இடத்தை இவருக்கு தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இவர் இசைக்கு ராஜா என்றும் பல பெயர்களையும் பட்டத்தையும் வென்றுள்ளார். படம் ஓடாவிட்டாலும் இவரது பாட்டு ஹிட் அடிக்கும். இவரது மெல்லிசை பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. கிராமப்புறங்களில் பேருந்துகளில் ஏறினால் இவரது பாட்டு இல்லாத பேருந்து இருக்காது. இவர் இசைஞானி என்று பட்டம் சூடி இவரை பெருமைப்படுத்தியது இந்திய சினிமா.
ஓசூரில் ராஜா:
ஓசூரில் முதல் முறையாக ராஜா தனது இசை கச்சேரியை நடத்துகிறார். இதை முன்னிட்டு நேற்று இரவு 11 மணி அளவில் நடுங்கும் குளிரிலும் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இளையராஜாவின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ.1000 லிருந்து ஆரம்பமாகிறதாம். ராஜாவின் 50ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.