தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை வரவேற்க அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே தாயாராகி வருகிறார்கள். அனைத்து திரையரங்குகளிலும்,  பேனர் வைத்து அஜித் புகைப்படத்திற்கு அலங்கரித்து அழகு பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளை 'விஸ்வாசம்' திரைப்படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் சேரன் இயக்கி வரும் 'திருமணம்' படத்தின் டிரைலர் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதனை இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:

விஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் 'திருமணம்' திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.. ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள். என்று கூறியுள்ளார்.

இதன் மூலமாக எப்படியோ சேரனின், திருமணம் அஜித் படத்தோடு இணைத்து விட்டது.