thirisha like to act jayalalitha biography movie

திரையுலகில் வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. மேலும் இந்த படத்தில் சில்க் சுமிதாவாக நடித்த நடிகை வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இதைதொடர்ந்து தோனி, சச்சின், மேரிகோம், உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

அண்மையில், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு நல்ல வரவேற்ப்பை பெற்று, நடிகை கீர்த்தி சுரேஷை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

இதைதொடர்ந்து தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கிறது. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். 

ஜெயலலிதா மறைந்தபோது, தனியாக சென்று அவரது உடலுக்கு மலர் தூவி திரிஷா மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது ட்விட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார். இதுகுறித்து திரிஷா கூறும்போது "சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க தாயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.