Asianet News TamilAsianet News Tamil

’திமிரு பிடிச்சவன்’என்னோட கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளது’...க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார்


‘என்னடா படம் ரிலீஸாகி ரெண்டாவது நாளாகியும் ஒரு திருட்டுக்குற்றச்சாட்டைக்கூடக் காணோமே’ என்று கவலைப்படத் தொடங்கிய நேரத்தில் இதோ கிளம்பிவந்திருக்கிறார் க்ரைம் ஸ்டோரி மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார். அவர் குற்றம் சாட்டியிருப்பது நேற்று வெளியாகிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தை.

thimiru pidichavan is my story says writer rajeshkumar
Author
Chennai, First Published Nov 17, 2018, 5:18 PM IST


‘என்னடா படம் ரிலீஸாகி ரெண்டாவது நாளாகியும் ஒரு திருட்டுக்குற்றச்சாட்டைக்கூடக் காணோமே’ என்று கவலைப்படத் தொடங்கிய நேரத்தில் இதோ கிளம்பிவந்திருக்கிறார் க்ரைம் ஸ்டோரி மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார். அவர் குற்றம் சாட்டியிருப்பது நேற்று வெளியாகிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தை.thimiru pidichavan is my story says writer rajeshkumar

சில நிமிடங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஒரு பதிவில்,’இவர்கள் திருந்த மாட்டார்கள்.

சென்ற வருடம் நான்  ஒரு இணையத்தில் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன். 
அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து  'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?’ என்று கொந்தளித்திருக்கிறார் ராஜேஷ்குமார்.thimiru pidichavan is my story says writer rajeshkumar

பின்னூட்டங்களில் அவரது வாசகர்கள்,’விடுங்க சார் எருமை மாட்டுல மழை பேஞ்சமாதிரி இந்த சினிமாக்காரனுக திருந்தவே மாட்டானுங்க’ என்று தொடங்கி சினிமாக்காரர்களின் மானத்தை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios