Singer Suchitra : கடந்த 2017ம் ஆண்டு "சுசி லீக்ஸ்" வெளியான பிறகு பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரபலமான பாடகி சுசித்ரா, கடந்த சில நாட்களாகவே மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பெற துவங்கியுள்ளார்.

பிரபல பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக கொடுத்து வரும் பேட்டிகளில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் குறித்து அவதூறாக பல கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவர் தனுஷோடு இணைந்து குடித்துவிட்டு தனி அறையில் இருந்ததாகவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். 

இதன் பிறகு அதை மறுத்து நடிகர் கார்த்திக் குமார் அவர்களும் சில அறிக்கைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது தனது youtube சேனலில் ஒரு தகவலை தனது பார்வையாளர்களுக்காக வெளியிட்டுள்ளார் பாடகி சுசித்ரா. 

ம*** போச்சுனு சொல்லிட்டு நகர்ந்து வா! கார்த்திக்குமாரின் இரண்டாவது மனைவி போட்ட அதிரடி பதிவு!

"நான் பல youtube சேனல்களை பார்த்து வருகிறேன், அதில் thumbnailளில் என்னை தனுஷ் கற்பழித்து விட்டதாகவே பகிரங்கமாக கூறுகிறார்கள். அனிருத் என்னை கற்பழித்ததாக கூறுகின்றார்கள். ஆனால் இது எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் யோசிக்க போவதுமில்லை"

"இனி எந்த ஒரு youtube சேனலுக்கும் நான் பேட்டி கொடுக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதனுக்கும் எனக்கும் நடந்த போட்டியில் அவரே வென்றதாக இருக்கட்டும். எனது முகம் குறித்து அவர் பேசியிருக்கிறார். 50 வயதில் அனைவருக்கும் முகம் இப்படித் தான் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு தான் எனது ஐம்பதாவது பிறந்தநாளை நான் கொண்டாடினேன்". 

"என் கண்களில் கருவளையம் இருக்கிறது, இந்த வயதில் அதெல்லாம் சகஜம் தான். என் முகத்தில் தோன்றும் சிறு சிறு பருக்கள் பூச்சிக்கடியால் ஏற்பட்டது. அதே சமயம் நான் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி விட்டதாக பலர் கூறுகின்றனர். தொடர்ச்சியாக போதைப்பொருள் உட்கொள்பவர்களுடைய ஈறுகள் எல்லாம் கருமையாக மாறிவிடும்". 

"ஆனால் எனக்கு இன்றளவும் இளஞ்சிவப்பு நிறத்தில் அவை இருக்கின்றது. இதையெல்லாம் நான் ஏன் இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. எனது சேனலுக்கு வரும் ரசிகர்கள் என்னையும் நான் செய்யும் சினிமா விமர்சனத்தையும் ரசிப்பவர்கள். ஆகையால் அவர்களை வருத்தமடைய செய்ய மாட்டேன்".

இனி இப்படிப்பட்ட வீடியோக்களை எனது சேனலில் போட மாட்டேன், நிச்சயம் சினிமா விமர்சனங்களையும், தத்துவம் நிறைந்த விஷயங்களை பற்றிய வீடியோக்களை மட்டுமே நான் நான் வெளியிடுகின்றேன். தயவு செய்து என் சேனலை விட்டு யாரும் போய் விட வேண்டாம்" என்று அந்த வீடியோவில் பிரபல பாடகி சுசித்ரா.

Maheshwari : கிளாமர் போட்டோஸ்.. அசிங்கமா கமெண்ட் செய்த நெட்டிசன்கள் - VJ மஹேஸ்வரி சொன்ன பதில் என்ன தெரியுமா?