தளபதி 68ல இவங்க எல்லாரும் நடிக்கிறாங்க.. டாப் ஸ்டார் கொடுத்த இன்ப அதிர்ச்சி - உண்மையைத்தான் சொல்றாரா?
தளபதி விஜய் நடிக்கும் அவருடைய 68வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கு உள்ள நிலையில், இன்று அந்த திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தளபதி 68 படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர், நடிகைகள் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு இது சம்பந்தமான எந்த விதமான தகவலையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜயின் சமகாலத்து நடிகரான டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள், தனது முகநூலில் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளார். அவருடைய முகநூல் பக்கத்தில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு பதிவில் இன்று சென்னையில் தளபதி 68 திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றது.
அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் பிரபுதேவா, நடிகைகள் பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி மற்றும் மூத்த தமிழ் திரைப்பட நடிகைகள் சினேகா மற்றும் லைலா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர் என்கின்ற ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சுமார் ஒரு மில்லியன் பேர் அவரை facebookல் பின்தொடர்வதால் அந்த பதிவு நிச்சயம் போலியானதாக இருக்காது என்று பலரும் நம்பி வருகின்றனர். இருப்பினும் இது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் படக்குழுவிடமிருந்து இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் அவர்களின் 68 வது திரைப்படம் சூடு பிடித்துள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் டிரைலர் வழியாக உள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில மணி நேரங்களுக்கு முன்பு தளபதி விஜய் அவர்களே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது