There no double meaning dialogues films by GV prakash
கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் எல்லாமே இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள படங்கள் என்ற பெருமையை பெற்றிருந்தது ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள்.
அதனால் அவரும் இனி அது போன்ற வசனங்களை பேசி நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்தார். இந்நிலையில்தான் தெலுங்கில்நாகசைதன்யா, தமன்னா நடித்த '100% லவ்' படத்தின் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தன் ஆகி இருக்கிறார்.
நாக சைதன்யா வேடத்தில் ஜி.வி நடிக்க தமன்னா வேடத்தில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்தனர்..
தெலுங்கில் தற்போது லாவண்யா திரிபாதி பிரபலமாக இருக்கும் நிலையில் அவரை ஒப்பந்தம் செய்யலாமா என்று யோசித்த படக்குழு தற்போது ஹேபா பட்டேல் இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான இவர் தமிழில் ஜெய் நடித்த 'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் '100% லவ்' படத்தை இயக்கிய B.சுகுமார் தயாரிக்கும் இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் சந்திரமெளலி இயக்கவுள்ளார்.
