நேற்று நடந்து முடிந்த, தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், சற்று முன்னர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய சங்கங்களில் ஒன்று தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது, அதில் தேனாண்டால் முரளி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் உட்பட மற்ற பொறுப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த தேர்தல் மீண்டும் நடந்தது.

எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்தவர் அஜித்..! தல-யை ரசிகர்கள் கொண்டாடவும் இது தான் காரணம்!

இதில், தயாரிப்பாளர் சங்க தலைவர், இரண்டு துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு, கடந்த முறை தயாரிப்பாளர் சங்க தலைவராக வெற்றி பெற்ற தேனாண்டாள் முரளி மீண்டும் போட்டியிட்டார். மற்றொரு அணியில் இருந்து மன்னன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைபுலி தாணு, சேகரன், தமிழ் குமரன் மற்றும் விடியல் ராஜு ஆகியோரும், செயலாளர் பதவிக்கு, பி எல் தேனப்பன் கமிலா நாச,ர் எஸ் கதிரேசன், கே கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களாக 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இந்த பதவிக்கு நடிகை தேவயானி உட்பட 77 பேர் போட்டியிட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் இந்த தேர்தலுக்கு, அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க தேத்தலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்திய நிலையில், சற்று முன்னர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்றது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து தேனாண்டாள் முரளி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், அவரே வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.