நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் சொல்லும் டயலாக் வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அது தொடர்ந்து கதைத்திருட்டில் ஈடுபடும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஏகப்பொருத்தம். 

சர்கார் ரிலீஸுக்கு இன்னும் இருவாரங்களே உள்ள நிலையில், கதைத்திருட்டு பஞ்சாயத்தில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்கியராஜ், இது உண்மையில் திருடப்பட்டதுதான். வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதை என்ன சொல்கிறதோ அதையே தான் முருகதாசின் கதையும் சொல்கிறது. எழுத்தாளர் சங்கத்தலைவரின் கடமை எதுவோ அதை செய்து வருகிறேன். முருகதாசிடம் தனிப்பட்ட முறையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிற விவரத்தைச் சொன்னேன்.  

ஆனால் அவரோ ‘சிவாஜி சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரது ஓட்டை வேறு ஒருவன் போட்டு விட்டான் என்கிற உண்மையை வைத்துக் கதையைப் பண்ணினேன்’என்கிறார். “வெளியூரிலிருந்து ஒருவன் ஓட்டுப் போடுவதற்காக ஊருக்கு வருகிறான். யாரோ ஒரு அனாமதேயம் அந்த இளைஞனின் ஓட்டைப் போட்டிருப்பது தெரிகிறது. கோபம் வருமா, வராதா? நிறைய வந்தது. ஆகவே கோர்ட்டுக்குப் போகிறான். 

தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக வருகிறது. இதனால அரசியல் வாதிகளுடன் மோதல் வருகிறது, மறுதேர்தல்.அந்த வாலிபனே தேர்தலுக்கு நிற்கிறான். அவன் வெற்றி பெற்றதும் அரசியல் சூழல் அவனை முதல்வராக அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வருகிறது. அந்த அளவுக்கு மறுதேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. இதே கதைதான் சர்காரின் கதையும் என்பது வருண் ராஜேந்திரன் வாதம். 

சிவாஜி சாருக்கு மட்டும் இல்ல எவ்வளவோ பேருக்கு நடந்திருக்கு. ஆனால் ஓட்டுப் போட முடியாமல் போன ஹீரோ கேஸ் போட்டு மறுதேர்தலில் அவனே நிற்பதெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாடியே அந்த எழுத்தாளன் பதிவு செய்திருக்கிறானேன்னேன். ஆனால் என் தீர்ப்பை மதிக்காமல் ’சார் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் .நீங்க அந்த ஆளின் புகாரை பதிவு செய்து கொள்ளுங்கள்’ என்றார் முருகதாஸ். 

அதற்கு பின்னர்தான் சங்கத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டிலில் போடலாம் என்பது எனது ஆலோசனையாக இருந்தது . ஒருத்தன் வருஷக்கணக்கா பத்திரப்படுத்தி வச்சிருந்த கதையை பொசுக்குன்னு அவன் கதை இல்லேன்னு சொல்லிட முடியுமா? சங்கத்தின் முடிவை அந்தப் பையனிடம் சொல்லி விட்டேன். இந்த அளவுக்குத்தான் சங்கம் உதவி செய்யமுடியும் என்பதையும்  சொல்லி விட்டேன்’ என்கிறார் பாக்கியராஜ். இது முருகதாஸ் போன்ற கார்ப்பரேட் கிரிமினல்களின் காலம். பாவப்பட்ட உதவி இயக்குநருக்கு நீதியை எல்லாம் எதிர்பார்க்கமுடியுமா?