Theerpugal Virkkapadum Trailer :  பெண் உரிமைக்காக எதிரிகளுடன் போராடும் நாயனாக நடித்துள்ள சத்யராஜ் திரில்லர் ஹீரோவாக மாஸ் காட்டியுள்ளார். 

வில்லனாக நடிக்க ஆரம்பித்து தனது எதார்த்த நக்கல் பேச்சால் மக்களை கவர்ந்து ஹீரோவானவர் சத்யராஜ். 90களில் இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிலும் அம்மாவாசை கதாபாத்திரம் இன்றும் மனதில் நிற்க கூடியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியுள்ளார். 

தயாரிப்பாளர் சலீம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தீரன் அவர்களின் இயக்கத்தில், சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளிடப்பட்டுள்ளது.

'தீர்ப்பு விற்கப்படும்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஹனி பீ கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. எஸ்.என்.பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ஆஞ்சு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. 

இந்த படத்திலிருந்து தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. பெண் உரிமைக்காக எதிரிகளுடன் போராடும் நாயனாக நடித்துள்ள சத்யராஜ் திரில்லர் ஹீரோவாக மாஸ் காட்டியுள்ளார்.

YouTube video player