Asianet News TamilAsianet News Tamil

Breaking : ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிட முடியாது!! அதிரடி காட்டும் திரையரங்க உரிமையாளர்கள்!!

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்கங்களை, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளித்தார். இந்நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் தங்களின், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
theatre owners shocking decision for ott release movies
Author
Chennai, First Published Sep 2, 2021, 11:07 AM IST

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்கங்களை, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளித்தார். இந்நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் தங்களின், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத காரணத்தால், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி சூரரை போற்று, படத்தில் துவங்கி சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை, நயன்தாராவின் நெற்றி கண் என பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இது போன்ற படங்களை திரையரங்கில் வெளியிட்டால் வேற லெவலில் வசூல் சாதனை செய்திருக்கும் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாகவும் இருந்தது.

theatre owners shocking decision for ott release movies

எனினினும், ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டார்களா? என சில ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது போன்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது அதிரடி முடிவை வெளியிட்டுள்ளனர்.

theatre owners shocking decision for ott release movies

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, ஓடிடி திரையரங்கில் நேரடியாக வெளியான படங்களை, இனி திரையரங்கில் வெளியிட கூடாது என முடிவு செய்துள்ளதாகவும், திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பின், ஓடிடியில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து, சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றிப்படங்கள் இனி திரையரங்கில் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.

theatre owners shocking decision for ott release movies

கடந்த மாதம் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்த போதிலும், பராமரிப்பு காரணங்களால் இதுவரை, 30 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அனைத்து திரையரங்குகளுக்கு திறக்கப்படும் என, ஏற்கனவே திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios