கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரைத்துறையில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அப்படி சினிமாவில் தினக்கூலி தொழிலாளர்களாக திண்டாடும் தொழிலாளர்களுக்காக நிவாரணம் திரட்டப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலரும் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதி வழங்கினர்.

இதனிடையே செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமாவது அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டது. டப்பிங், விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை, மிக்ஸிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு 5 பேரை மட்டும் கொண்டு, அரசாங்கம் கூறியுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடிப்பதாகவும் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசும் கடந்த வாரம் முதல் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை தொடங்க அனுமதி கொடுத்தது. தற்போது மாஸ்டர், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோலிவுட்டில் மற்றொரு பிரச்சனை தீவிரமாக உருவெடுத்துள்ளது. அதாவது கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பல படங்களை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே பிரச்சனை வெடித்தது. 

இதையும் படிங்க: 42 வயதில் அம்மாவான விஜய் பட நடிகை... முதல் முறையாக குழந்தையின் புகைப்படம் வெளியீடு...!

தமிழ் திரையுலகில் விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பிரச்சனை காரணமாக மூடப்பட்டுள்ள தியேட்டர்களை திறப்பது எப்போது?, படப்பிடிப்புகளை மீண்டும் எப்போது தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.