பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தளபதி விஜய், மற்றும் சிம்பு ஆகிய இரு பெரிய நடிகர்கள் படம் வெளியாகி உள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் மக்கள் போட்டி போட்டு படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே சில திரையரங்குகளில் விதிகளை மீறி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மேல் அனுமதிப்பது கண்டு பிடிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார் சென்னை காவல் ஆணையர்.

கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.   இந்த விதியை மீறும் வகையில், செயல் பட்ட சில திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்  ‘திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் இந்த விதியை மீறினால் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள் பலரும், காவல் ஆணையரின் இந்த அதிரடி செயலுக்கு தங்களது வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.