“உண்மையான உழைப்பு தோற்றதாக சரித்திரம் இல்லை” என்று அஜீத் சார் சொன்ன வார்த்தை பலித்து விட்டது என்று இயக்குனர் சிவா உற்சாகத்துடன் தெரிவித்தார்.

‘விவேகம்’ படம் வெளியான சில நாட்களில் அந்தப் படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலுக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

விமர்சிப்பவர்களுக்கு தான் படம் பிடிக்கவில்லை. ஆனால், “திரைப்பட” ரசிகர்களுக்கு படம் பிடித்ததால் தான் இன்னமும் படம் ஓடுது. வசூல் வேட்டை ஆடுது.

இயக்குநர் சிவா படத்தை பற்றி கூறியது:

“தரக்குறைவாக பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும்னு நாம் சொல்லமுடியாது, சிலருக்கு கிளைமாக்ஸ் காட்சியில் வந்த பாடல் பிடித்தது. சிலருக்கு அது பிடிக்கவில்லை.

மேலும், உண்மையான உழைப்பு தோற்றதாக சரித்திரம் இல்லை என்று அஜித் சார் சொன்னாரு. அவர் சொன்ன வார்த்தை இப்போது பலித்து விட்டது’’ என்று அவர் கூறினார்.