The vibrant Sai Pallavi is the Heroine of Maari 2

சென்டிமென்டுகளை தாண்டிய பரிசோதனை முயற்சிகள் நடிகர் தனுஷுக்கு பிடித்தமானவையே! வேலையில்லா பட்டதாரி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்திருந்த தைரியத்தில் மிரட்டல் தோற்றத்தில் கஜோல், செளந்தர்யா ரஜினியின் இயக்கம் என்று செம காம்போவாக வி.ஐ.பி. 2_வை உருவாக்கினார் தனுஷ். ஆனால் படம் பப்படம் ஆகிவிட்டது. 
இதைத்தொடர்ந்து தனுஷூக்கு ‘பார்ட் 2’ சரிப்பட்டு வராது என்று ஒரு சென்டிமெண்டல் டாக்கை கிளப்பிவிட்டனர் கோடம்பாக்க குருவிகள் சிலர். 

ஆனால் அதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன் ஹிட் மூவியான ‘மாரி’யின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிவிட்டார் தனுஷ். 

அதே பாலாஜி மோகன் இயக்கம்தான் என்றாலும் இந்த படத்தில் பழைய ஹீரோயின் காஜல் மற்றும் விஜய் யேசுதாஸ் ஆகியோருக்கு கல்தா கொடுத்துவிட்டனர். 

செம சர்ப்பரைஸிங்காக இதில் தனுஷூக்கு ஜோடி சேர்கிறார் சாய் பல்லவி. பிரேமத்தின் மூலம் தென்னிந்தியாவின் லவ்லி ஏஞ்சலாகியிருக்கும் சாய் பல்லவி தமிழில் ஒப்பந்தமாகியிருக்கும் இரண்டாவது படம் இது. முதல் படமாக வெளி வரவிருக்கிறது ஏ.எல்.விஜய்யின் ‘கரு’.

Scroll to load tweet…

மாரி 2வில் தனுஷின் வில்லனாக கேரளத்தின் ஹாட் ஹீரோ டோவினோ தாமஸ் களமிறங்குகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது இது. இதை இப்படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மாரி 2' படத்தின் நாயகியாக சாய் பல்லவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக மும்முரமாகியுள்ளார்.