the ultimate change in famous directors upcoming movie

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் என்.ஜி.கே. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் பிரீதி சிங் என இரண்டு முக்கிய கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கியூபா புரட்சியாளர் ’சே குவேரா’ போன்ற தோற்றத்தில் சூர்யாவின் லுக் ரசிகர்களை அசத்தியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் சூர்யா ஒரு புரட்சியாளராக நடித்திருக்கலாம், அல்லது புரட்சிகரமான கதையாக இந்த என்.ஜி.கே இருக்கலாம் என, இப்போதே ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பையும், கற்பனையையும், கலந்து யோசித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் வைத்து நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் படத்தொகுப்பாளராக முதலில் ஒப்பந்தம் ஆகியிருந்தவர் எடிட்டர் பிரசன்னா. இப்போது அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற எடிட்டட் பிரவீன்.கே.எல், இத்திரைப்படத்தில் இனி எடிட்டிங் பணிகளை செய்ய உள்ளார்.

தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகிவருகிறது என்.ஜி.கே. அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்திருக்கும் விசுவாசம் படமும், தீபாவளியை குறிவைத்தே வேகமாக தயாராகி வருகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.