உண்மையைச் சொன்னால் எனக்கும் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் ஆரம்பிப்பீங்களா? என்று நடிகை கஸ்தூரி டிவிட்டியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல். இப்படத்தின் சிங்கிள் டிராக்கான ஆளப்போறான் தமிழன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி டிவிட்டரில் மெர்சல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், “டிவிட்டரில் உண்மையைச் சொன்னா எனக்கும் விஜய் ரசிகர்கள் ஹேஸ்டேக் ஆரம்பிப்பிங்களோ? ரஹ்மான் – விஜய் கூட்டணியிடம் இன்னும் நான் அதிகமாக எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் ஒரு பெண் பத்திரிக்கையாளர் விஜய்யின் சுறா படத்தை விமர்சித்ததற்கு விஜய் ரசிகர்கள் எல்லை மீறி விமர்சித்தனர் என்பதும், அதற்கு விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகொள் விடுத்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

கஸ்தூரி அதை தான் குத்திக் காட்டுகிறாரோ…