The Tamil Gun Internet Admins are in jail and Vishal is releasing on the same website.

தமிழ் கன் இணையதள அட்மின் கைதாகி சிறையில் உள்ள நிலையில், விஷால் நடித்து வெளியான துப்பறிவாளன் படம் அதே இணையதளத்தில் வெளியாகியுள்ளது திரையுலத்தினரை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.

புதிய திரைப்படங்கள் திரையில் வெளியான சில நாட்களிலேயே இணையதளத்தில் வெளியாகிவிடும். இதற்கு போலீசார், சினிமா பிரபலங்கள் எவ்வளாவோ முட்டுக்கட்டை போட்டும் அதை தடுக்க முடியவில்லை. 

இந்நிலையில், புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் தேர்வானதும் எடுத்த முதல் அதிரடி நடவடிக்கை திருட்டு தனமாக இணையதளத்தில் வெளியாகி வரும் திரைப்படத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பது. 

அந்த வகையில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்காவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், பாகுபலி 2 இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இதற்கு காரணமான தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து, தற்போது, தமிழ்கன் இணைதளத்தின் அட்மின் கவுரி சங்கர் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து துப்பறிவாளன் படம் இன்று திரையரங்குகளில் ரிலீசானது. இந்நிலையில் துப்பறிவாளன் படத்தை tamilgun.fun என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் சினி உலகம் செம்ம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.