சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை என்னுடையது என்று பிரபல இயக்குனர் தமிழ்வாணன் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். தற்போது இவர் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் வேலைக்காரன் படத்தின் கதை என்னுடையது என்று ‘கள்வனின் காதலி’, ‘மச்சக்காரன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தமிழ்வானன் இயக்குனர் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி இதற்கு உரிய முறையான இழப்பீடு வாங்கி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுவரை வெவ்வேறு பிரச்சனைகளை சந்தித்தி இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது புதுசு தான்.

இதை படக்குழு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.