Asianet News TamilAsianet News Tamil

’சந்தானத்தின் ‘ஏ 1’ பிராமணர்களுக்கு எதிரான படம் அல்ல’...இசையமைப்பாளர் சந்தோஷ் ’நாராயணன்’ சர்டிபிகேட்...

’சந்தானத்தின் ‘ஏ 1’பிராமணர்களைத் தாக்கி எடுக்கப்பட்ட படம் அல்ல. டீஸரை பார்த்து கிளம்பிய சர்ச்சைகளுக்கு முற்றிலும் எதிரான படமாக இது இருக்கும்’என்கிறார் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

the story of comedian santhanam's movie 'a1'
Author
Chennai, First Published Jul 24, 2019, 10:26 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


’சந்தானத்தின் ‘ஏ 1’பிராமணர்களைத் தாக்கி எடுக்கப்பட்ட படம் அல்ல. டீஸரை பார்த்து கிளம்பிய சர்ச்சைகளுக்கு முற்றிலும் எதிரான படமாக இது இருக்கும்’என்கிறார் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.the story of comedian santhanam's movie 'a1'

’தில்லுக்கு துட்டு 2’ வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடித்து வெளிவரவுள்ள படம் ஏ 1 ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தாரா அலிசா பெரி நாயகியாக நடித்துள்ளார்.இப்படம் ஜுலை 26 வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். நேற்று ஜூலை 23 அன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது.

நிகழ்வில், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,..இந்த மேடையில் சந்தானம் சார் இருக்கிறதால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. ஜான்சன் அவர்களின் ரைட்டிங் அருமையாக இருந்தது. சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது.ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார்.

இந்தப்படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம்,தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப்படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. பிராமணர்களுக்கு எதிரான படம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாகப் படம் இருக்கும்’ என்றார்.

நடிகர் சந்தானம் பேசும்போது,’தில்லுக்கு துட்டு2″ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன்.2000 ல் டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை.என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையைத் தான் படமாக்கி இருக்கார்.the story of comedian santhanam's movie 'a1'

இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்பப் புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரே மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார்.ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார்.

நாம ஆசைப்பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள்.எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு.நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்’ என்றார்

Follow Us:
Download App:
  • android
  • ios