The second part of Oviya starring ghost movie coming soon ...
ஓவியா நடித்த பேய் படமான ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் உருவாக உள்ளதாம்.
நடிகர்கள் அஞ்சு கிருஷ்ணா, கருணாகரன், நடிகைகள் ரூபா மஞ்சரி, ஓவியா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘யாமிருக்க பயமேன்’.
இந்தப் படத்தை இயக்குனர் .டி.கே. இயக்கினார்.
படம் முழுக்க இரட்டை வசனங்கள் இருந்தாலும், இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அடுத்ததாக டி.கே. இயக்கிய ‘கவலை வேண்டாம்’ படத்துக்கு ஓரளவுதான் வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள்.
தற்போது, நடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் கவர்ந்துள்ளதால் அவரை வைத்து தன்னுடைய பேய் படமான ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் டிகே.
இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது கொசுறு தகவல்.
