The release of music by Super Star Star ...

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகா் மோகன்லால் நடித்த ‘வில்லன்’ படத்தின் இசையை பிரபல இயக்குனரான ஜோஷி வெளியிட்டார்.

பிரபல இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவான படம் ‘வில்லன்’.

ஓணம் பண்டிகைக்கு வெளியான அனைத்துப் படமும் பொருளாதார ரீதியில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தைதான் மலையாள ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் முதல் முறையாக மலையாளத்தில் நடிகர் விஷாலும், நடிகை ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளாது.

இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபல இயக்குனர் ஜோஷி பாடல்களை வெளியிட்டார்.