Asianet News TamilAsianet News Tamil

Vikram movie : ”டேய் கொஞ்சம் சும்மா இர்றா..!” எஸ்.ஜே.சூர்யாவை கூப்பிட்ட லோகேஷ்.. செக் வைத்த கமல்

Vikram movie : மிக குறைந்த நாட்களில் எஸ்.ஜே.சூர்யாவுக்காக ஒரு வலுவான ஸ்பேஸ் மற்றும் கதாபாத்திரத்தை  உருவாக்கி, ஆஸம்  டயலாக்குகளும் அமைத்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் கமல் மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே  விக்ரம் படத்தில்  எஸ் ஜே சூர்யா கமிட் பண்ணவில்லையாம்.. 

The reason of sj surya not in vikram..
Author
Chennai, First Published Jan 12, 2022, 3:31 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் சினிமாவின் இன்றைய ஹாட் முகம் யாரென்று கேட்டால்….அஜித், விஜய் என்று  நீங்கள் பெரிய பட்டியல் போடலாம். ஆனால் அவர்களையெல்லாம் கடந்து கரெண்ட் டிரெண்டிங்கில் இருப்பவர் வேறு யாருமில்லை மாஜி இயக்குநரும், மிடில் ஹீரோவும்,  பிரசன்ட்  வில்லனுமான எஸ்.ஜே.சூர்யாதான். 

ஹாண்ட்சம், திறமையான நடிப்பு, அசத்தல்  பாடி லாங்வேஜ் என்று மனிதர் பின்னி எடுப்பதாலும், டயலாக் டெலிவெரியில் கூட  ஆஸம்னஸ் காட்டுவதாலும் அவருக்கான மார்க்கெட் எகிறி இருக்கிறது. அதிலும், மாநாடு படத்தின் தாறுமாறான ஹிட்டிற்கு பிறகு உச்சம் தொட்டிருக்கிறது எஸ்.ஜே.எஸ்.ஸின் மார்க்கெட்.  அடுத்து உருவாக இருக்கும் பல முக்கிய படங்களில் எஸ்.ஜே.சூர்யாவை புக் செய்திட துடிக்கிறார்கள் முன்னணி இயக்குநர்கள். அதேப்போல் புதிய திரைக்கதை அமைப்புடன் வரும் இளம் இயக்குநர்களின் ரைட் சாய்ஸாகவும் இருக்கிறார் இவர்.

The reason of sj surya not in vikram..

தமிழகத்தின் ஹிட் ஹாட் இளம் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘விக்ரம்’  படத்தை  இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில்  நடிப்பு ராட்சஸன்களான கமல், விஜய் சேதுபதி மற்றும்  பகத் பாசில் ஆகியோர் ஏற்கனவே உள்ளனர். இவர்கள் போக தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவையும் உள்ளே இழுத்தால், படத்தின் ரீச் வேற லெவலுக்கு போகுமென்பது லோகேஷின் எண்ணம். அதனால், மிக குறைந்த நாட்களில் எஸ்.ஜே.சூர்யாவுக்காக ஒரு வலுவான ஸ்பேஸ் மற்றும் கதாபாத்திரத்தை  உருவாக்கி, ஆஸம்  டயலாக்குகளும் அமைத்தார். 

கமலிடம் இந்த யோசனையை சொன்னபோது அவர், ‘ஏன் திடீர் இந்த உள் நுழைப்பு?’ என்று புருவத்தை உயர்த்த, எஸ்.ஜே.எஸ்.ஸுக்கான கேரக்டர் மற்றும் டயலாக்குகளை அவரிடம் காண்பித்தார். மெய்யாலுமே ரசித்தார் கமல். அதை அப்படியே எஸ்.ஜே.சூர்யாவிடம் கொடுத்தால், மனுஷன் பின்னிப் பேர்த்தெடுத்துவிடுவார் தான். ஆனால் ஏனோ கமல்ஹாசன் ஓ.கே. பண்ணவில்லை. ‘நல்லாருக்கு. ஆனால் நாம எல்லாத்தையும் ஃபைனலைஸ் பண்ணிட்டோம். இனி புதுசா எந்த முயற்சியும் வேணாமே!’ என்று லோகேஷின் மனம் நோகாத வண்ணமும், தன்னை தாண்டி ப்ராஜெக்ட்டின் லெவல் போகாத வண்ணமுமாய் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். லோகேஷும் அதற்கு ஓ.கே.பண்ணி நகர்ந்துவிட்டார்! ஏன் என்று எந்த காரணமும் கேட்கவில்லை. 

The reason of sj surya not in vikram..

நல்லாயிருக்கு! என்று பாராட்டிய பின்னும் எஸ்.ஜே.எஸ்.ஸை உள்ளே இழுப்பதில் கமல்ஹாசனுக்கு என்ன பிரச்னை? என்பதுதான் இந்த விவகாரத்தை அறிந்தோரின் கேள்வி. இதற்கான விடை கமலுக்கு மட்டும்தான் தெரியும் என்பதே உண்மை. 

Follow Us:
Download App:
  • android
  • ios