விவேகம் படத்தால் தளபதியின் மெர்சல் படத்தின் டீசர் தள்ளிப்போகியுள்ளதாக எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.

\கடந்த 24-ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் நல்ல விஷயங்களையும், பணம் வாங்கிக் கொண்டு எதிரான விஷயங்களையும் விமர்சனம் செய்யும் எட்டப்பாக்களும் உள்ளனர்.

இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்களை மட்டும் பரப்புவதை குறிக்கோளாகக் கொண்டும் சிலர் இயங்குகின்றனர்.

இந்த நிலையில் எடிட்டர் ரூபன், “தல அஜித், தளபதி விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியோரின் நல்ல எண்ணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

தன் படத்தின் டிரைலர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்படக்கூடாது என்று அனைவரும் பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்.

ஏனென்றால், மெர்சல் படத்தில் டீசர் வெளியாக இருந்த நிலையில், தல நடித்த விவேகம் படம் வெளியானது.

இந்த நேரத்தில் தளபதி மெர்சல் வெளியானால், வசூல் பாதிக்கும் என்பதால் மெர்சல் படத்தின் டீசர் வெளியிடுவதை தள்ளிப்போட்டனர்” என்று தெரிவித்தார்.