நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் எதற்காக இணைந்தார் என்கிற காரணம் வெளியில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த வாரம் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

இது குறித்த செய்திகளும் வெளியாகி வந்தன. ஆனால் அவர் எதற்காக அதிமுகவில் இணைந்தார் என்கிற அதிர்ச்சி காரணம் வெளியாகி உள்ளது. அப்படி என்ன அதிர்ச்சி காரணம்? ‘’வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து சூடுபோட்டுக் கொண்டார் கஞ்சாகருப்பு. அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் அவரது மனைவி ஊரான மேலூர் அருகே உள்ள கட்டானிபட்டியில் போய் முடங்கிக் கிடந்தார். 

வளசரவாக்கத்தில் உள்ள வீட்டை அடமானம் வைத்து அந்தக் கடனை அடைத்தார். வீட்டிற்கு தவணைத் தொகை கட்ட முடியாமல் ஏலத்திற்கு வந்தது. ஆகையால் வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என்கிற நிலையில் இருந்தவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வந்து கொடுத்தது. தர்மதுரை, சண்டைக்கோழி-2 என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கஞ்சா கருப்பு ஓரளவு வீட்டுக்கான தவணைத் தொகை செலுத்தி வருகிறார். 

ஆனாலும், அவரால் சமாளிக்க முடியவில்லை. 
இந்த நிலையில், தனது பழைய காரை விற்று விட்டு கடனோடு கடனாக 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக வாங்கி மேலும் கடன் சுமையை அதிகரித்துக் கொண்டார். 

ஏற்கெனவே வீட்டுக்கு மாதத்தவணை இப்போது காருக்கும் மாதத் தவணை கட்டவேண்டிய சூழல். கார் மாதத் தவணைத் தொகையை ஓரிரு மாதங்களாக அவரால் கட்ட முடியவில்லை. 

இதனால் கடன் கொடுத்த நிறுவனத்திடமிருந்து கடும் நெருக்கடி. நண்பர்களிடம் பண உதவி கேட்டும் கிடைக்கவில்லை. அப்போது அவரது நண்பர் ஒருவரிடம் யாரிடமாவது பணம் வாங்கி கொடுக்க முடியுமா? எனக் கேட்டிருக்கிறார் கஞ்சா கருப்பு. அந்த நண்பர் கொடுத்த ஐடியாதான் அதிமுகவில் அவரை இணைய வைத்தது. எடப்பாடி தரப்பை நாடிய அவர்கள் தங்களுக்கு ஒரு லட்சம் கொடுத்தால் அதிமுகவில் இணைவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் தானே வந்து கையோடு வாங்கிட்டு கட்சியில இணைஞ்சிடுங்க என ஓ.பி.எஸ் தரப்பு கஞ்சாகருப்புவை அழைத்து அடிப்படை உறுப்பினராக மட்டுமே இணைத்துக் கொண்டுள்ளது. அதன் பிறகு தன்னை பார்க்க வருபவர்களிடம், ’அண்ணே என்ன காரியமா இருந்தாலும் செஞ்சி தர்றதா சொல்லி இருக்காரு. நம்ம மேல நல்ல அபிப்ராயம் அவருக்கு.. நட்சத்திர பேச்சாளாரா நம்மள இருக்க சொல்லிட்டாரு... உங்களுக்கு காரியம் ஆகணும்னா சொல்லுங்க... நான் ஒரு லெட்டரு குடுத்தா போதும். எந்தக் காரியமானாலும் நடந்துடும்’’  அடித்து அள்ளிவிட்டு வருகிறார் கஞ்சா கருப்பு..!