காலம் நவீன மையமாக மாற மாற, அதற்கேற்றாப்போல்... அனைத்தும் வீட்டில் இருந்தபடியே, அதுவும் கையுக்குள் அடங்கும் ஸ்டார்ட் போனின் மூலமாகவே கிடைத்து விடுகிறது.

குறிப்பாக, பொருட்கள் வாங்க விற்பனை செய்ய, எந்த பொருள் எங்கு தரமானதாக இருக்கும் என சின்ன சின்ன விஷயங்களில் தொடங்கி உலகமே உள்ளங்கையில் அடங்கி விடுகிறது.

அந்த வகையில் புதிய திரைப்படங்கள் வெளியான 100 நாட்களுக்கு முன்பாகவே, நெட்ப்ளிஸ், அமேசான், ஹாட் ஸ்டார், போன்ற பல்வேறு சமூக வலைதள ஆப்புகளில் வெளியாகிவிடுகிறது. இதனால் திரையரங்கம் சென்று படங்களை பார்ப்பவர்கள் கூட இன்னும் சில தினத்தில் சமூக வலைத்தளத்தில் பார்த்து விடலாம் என திரையரங்கம் செல்வது இல்லை.

இந்நிலையில் தற்போது இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த புகாரின் பேரில், தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை இனி அமேசான், நெட்ப்ளிஸ் போன்ற வலைத்தளங்களில் வெளியிட கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே இனி புதிய திரைப்படங்களில் ஆப்புகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.