the new movie mahanati got good reviews and rating all over the world

தனது அசாத்தியமான நடிப்பால் தென்னிந்திய திரையுலகையே ஒரு கலக்கு கலக்கிய, “நடிகையர் திலகம்” சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு, கீர்த்திசுரேஷின் நடிப்பில் ”மகாநடி” என்னும் திரைப்படமாக இன்று தமிழ் திரையரங்குகளில் ரிலீசாகவிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் , துல்கர் சல்மான், சமந்தா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ”மகாநடி” தெலுங்கில் மே9 அன்றே ரிலீசாகிவிட்டது. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மகாநடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படம் தான் வசூல் சாதனை படைக்கும் என்ற பொதுவான எதிர்பார்ப்புக்கு இடையே, சாவித்திரி தேவியின் இந்த வாழ்க்கை வரலாறு மீண்டும் வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தெலுங்கு மற்றும் வெளிநாட்டு விமர்சகர்கள் மத்தியில் ”மகாநடி” திரைப்படம் நல்ல வரவேற்பையும் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது. தமிழிலும் ”மகாநடி” திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.