the new leader for big boss 2 house was directly selected by bog boss

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், சென்ற முறை போல இல்லாமல், மிகவும் வேடிக்கையாக போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் பற்றி தெரிந்ததனாலோ என்னவோ, இம்முறை மிக கவனமாக விளையாடுகின்றனர் போட்டியாளர்கள். பிரச்சனைகள் கூட சின்ன சின்ன வெங்காய பிரச்சனைகளாக தான் இருக்கின்றன.

சண்டை காட்சிகள் இல்லாவிட்டால் என்ன? காமெடியை போட்டு மக்களை ஈர்க்கலாமே…! எனும் சிம்பிள் லாஜிக்கை இம்முறை உபயோகித்திருக்கிறார் பிக் பாஸ். அதற்கேற்ப இம்முறை வந்திருக்கும் போட்டியாளர்களில், சென்றாயன், டேனியல், யாஷிகா, பொன்னம்பலம், பாலாஜி என போன்றோர் காமெடியில் கலக்குகின்றனர்.

என்ன தான் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் கூட, இருக்கும் இடம் அறிந்து எளிதில் தங்களுக்குள் சமாதானம் ஆகிக்கொள்கின்றனர் இவர்கள் அனைவரும். நித்யா மும்தாஜ் இந்த இருவர் மட்டுமே ஓரளவு தங்கள் இயல்பை மறைக்க முடியாமல், கோப முகத்தை அவ்வப்போது காட்டுகின்றனர்.

இதனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டின் தலைவரை, போட்டியாளர்கள் தேர்வு செய்யாமல் பிக் பாஸே தேர்வு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிக் பாஸ் பிரமோவில், பாலாஜியின் மனைவி நித்யாவை, பிக் பாஸ் வீட்டின் புதிய தலைவராக, பிக் பாஸே தேர்வு செய்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

நேரடியாக #பிக்பாஸ் வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்படும் நித்யா! 😎🤔 #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/hY9u77OwwA

— Vijay Television (@vijaytelevision) June 25, 2018

இந்த செய்தி சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சும்மாவே இவர் ஏட்டிக்கு போட்டி பேசுவாரே..! இனி என்னவெல்லாம் செய்ய போகிறாரோ? என பிக் பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்திருக்கிறது இந்த முடிவு. இப்படி போட்டி இன்றி நித்யாவை பிக் பாஸ் தேர்வு செய்ய காரணம் என்ன? என இன்றைய நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் தெரியும்.